ஊட்டச் சத்து நிறைந்த உணவுகளை உண்ணுங்கள்

 



ஊட்டச் சத்து நிறைந்த உணவைத் தேர்ந்தெடுக்கவும். ஊட்டச்சத்து நிறைந்த  உணவுகளில் சர்க்கரை, சோடியம், மாவுச்சத்து மற்றும் கெட்ட கொழுப்புகள் குறைவாக உள்ளன. அவற்றில் நிறைய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் மற்றும் சில கலோரிகள் உள்ளன. உங்கள் உடலுக்கு நுண்ணூட்டச்சத்துக்கள் எனப்படும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் தேவை. அவை உங்கள் உடலுக்கு ஊட்டமளித்து ஆரோக்கியமாக இருக்க உதவும். உணவு மூலம் அவற்றைப் பெறுவது உங்கள் உடல் அவற்றை சரியாக உறிஞ்சுவதை உறுதி செய்கிறது.

பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்களைப் பெற பல்வேறு உணவுகளை சாப்பிட முயற்சி செய்யுங்கள். இயற்கையாகவே ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளில் பழங்கள் மற்றும் காய்கறிகள் அடங்கும்.


காய்கறிகள் மற்றும் பழங்கள் 


அதிக அளவில் காய்கள் மற்றும் பழங்களை நாம் உண்ணும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது எல்லோருமே சொல்லக்கூடிய விஷயம் தான். ஒவ்வொரு பருவகாலத்துக்கும் கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்களை நாம் உணவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதிலும், சுத்தம் என்று வரும்போது, அவை இயற்கை விளைபொருட்களாக இருத்தல் வேண்டும். பழங்கள் மற்றும் காய்கறிகள் மிகவும் ஆரோக்கியமானவை மட்டுமின்றி, ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. இவை உங்களுக்கு நிறைய நன்மைகளைத் தரும்.


ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், தாதுக்கள், கார்போ ஹைட்ரேட்டுகள், புரதங்கள், நார்ச் சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக் கொள்வதன் மூலம், உடலில் அதிக கொலஸ்ட்ரால் சேர்வது, டைப் 2 நீரிழிவு மற்றும் பிற நோய்களைத் தடுக்க உதவும். நீங்கள் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட, ரசாயனம் இல்லாத காய்கள் மற்றும் பழங்களை தேர்ந்தெடுத்து அவற்றை உண்ணுங்கள்.


தானியங்கள்


நீங்கள் தானியங்களை தேர்ந்தெடுத்து, அதனை சுத்தப்படுத்தி உங்களின் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். முழு தானிய உணவு வகைகளை சாப்பிடுவது உடலுக்கு நல்லது மற்றும் ஆரோக்கியமானவை. முழு தானிய உணவு வகைகளை நீங்கள் கடைகளில் வாங்குகிறீர் எனில், நீங்கள் வாங்கும்போது, அதில் உள்ள லேபிளை மிக கவனமாகப் படித்து பார்த்து பின் வாங்குங்கள். ஏனெனில், சில தயாரிப்புகளில் முழு தானியங்கள் மிகக் குறைவான அளவிலே கொண்டிருக்கும். 


மேலும், அதுபோன்ற பொருட்களில் செயற்கை பாதுகாப்புப் பொருட்கள் சேர்க்கப்படவில்லை என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். முழு தானிய உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம், செரிமானம் அதிகரிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் உதவுவதோடு எளிதாக உடல் எடையைக் குறைக்கவும் உதவும். இருப்பினும், பதப்படுத்தப்பட்ட தானிய உணவுகள் மற்றும் கார்போ ஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.


உங்கள் அட்சயபாத்ராவில் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள், தரமான காய்கறிகள் மற்றும் தானியங்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது, வீட்டில் சமைத்த உணவு போல பார்த்து பார்த்து சமைக்கப்படுகின்றன. 

  

         என்றும் உங்கள் நலனில் அட்சயபாத்ரா!



Phone.No: 63857 88401

Address: Flat No. 5, Theppakulam, near SBI Bank, Anuppanadi, 

                Madurai, Tamil Nadu, India 625009

Website: https://atchayapathrafoods.com/vegetarian-food-delivery-services/





Comments

Popular posts from this blog

Advantage of vegetarians

The Health Benefits of Beetroot: A Nutritional Powerhouse